ரஷ்யாவையே உலுக்கிய கொடூர கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்டி கார்ட்ரைட் என்ற பாடகரை அவரது மனைவி மெரினா என்பவர் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ரத்தத்தை குடித்தும், இறந்த உடலுடன் உடலுறவு மேற்கொண்டதாகவும் இந்த வழக்கு மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.
பாப் பாடகரான ஆண்டி கார்ட்ரைடு சக இசைக்கலைஞரான நாடியா என்ற 25 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டியுடன் மெரினாவுக்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது. ஒருகட்டத்தில் கணவனைக் கொலை செய்ய தீர்மானித்த மெரினா, தன் தாயின் உதவியுடன் கொலையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. நீரிழிவுக்கு கொடுகப்படும் இன்சுலின் மருந்தை அதிகம் கொடுத்து கணவனைக் கொன்றுள்ளார் மெரினா. கொலைக்கு பிறகு அவரது உடலுடன் உடலுறவு செய்துள்ளார். பின்னர் கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் வைத்து சில பாகங்களை எலிக்கு உணவாக போட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சில பாகங்களை துணி துவைக்கும் வாஷிங் மெஷினில் போட்டுள்ளார்.
தேவாலயம் அருகே ஓரல் செக்ஸ் ப்ராங்க்.. அதிரடியாய் கைது செய்த போலீசார்!
கொலைக்கு பிறகு வீட்டையே வினிகர் ஊற்றி சுத்தமாக் கழுவியதாகவும் மெரினா மீது குற்றம் சாட்டப்பட்டது. அடுக்கடுக்கான கொடூர குற்றச்சாட்டுகளால் சிறையில் கடந்த ஆண்டு அடைக்கப்பட்டார் மெரினா. இது தொடர்பான வழக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது மெரினாவுக்கு வீட்டுக்காவலுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொலையில் மெரினா ஈடுபட்டார் என்பதற்கான முக்கிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்காத நிலையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜாமீனுக்கு ஆண்டி குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இது நீதிக்கு எதிரான செயல் என குறிப்பிட்டுள்ளனர். ஆண்டி - மெரினா தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். வீட்டுக்காவலில் ஜாமின் என்றாலும் தன்னுடைய தாயை சந்திக்க மெரினாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் காப்பகத்தில் உள்ள மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. ரஷ்யாவை உலுக்கிய கொடூர கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரம் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்துகிறது காவல்துறை.