பொதுவாக செய்தி வாசிப்பாளர்களுக்கு அவர்கள் திறைக்கு பின்னால் என்ன திரையிடப்படுகிறது என்பது தெரியாது. ஏனென்றால் அவர்கள் வாசிக்கும் காட்சி மற்றும் பின்னால் திரையிடப்படும் காட்சிகள் ஆகிய அனைத்தையும் செய்தி தயாரிப்பு குழு ஒருகிணைத்து நமக்கு காட்டும். அந்தவகையில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்தி வாசிக்கும் போது அந்த செய்தி தொடர்பான காட்சிகளுக்கு பதிலாக ஆபாச வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள சிபிஎஸ் ஸ்டேட் செய்தி செனலில் வழக்கம் போல் வானிலை அறிக்கை செய்தி திரையிடப்பட்டுள்ளது. அப்போது செய்தி வாசிப்பாளர் வானிலை அறிக்கை தொடர்பான செய்தியை படிக்க தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் அவர் வாசித்த செய்திக்கு ஏதுவான காட்சிகள் திரையிடப்படாமல் ஆபாச வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது. திரையில் என்ன வருகிறது என்பது தெரியாததால் செய்தி வாசிப்பாளர் தொடர்ந்து வானிலை அறிக்கையை வாசித்து வந்துள்ளார். இதனால் அந்த ஆபாச வீடியோ மற்றும் செய்தி சில நேரம் அந்த செனலில் ஒளிப்பரப்பாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பலரும் இந்த செய்தி தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அத்துடன் பலரும் இதுபோன்ற தவறை இனிமேல் இந்தச் செனல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதுபோன்று பலரும் புகார் தெரிவித்த பிறகு இந்த சம்பவம் தொடர்பாக அந்த செய்தி செனல் மன்னிப்பு கோரியுள்ளது. அதில்,”எங்களுடைய தரப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த மாதிரியான விஷயம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தவறு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் செய்தி செனலில் இதுபோன்ற ஆபாச படம் திரையிடப்பட்டுள்ளது அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த தவறு குறித்து செய்தி செனல் உடனடியாக விசாரிக்க வேண்டும். இதில் வேறு யாரும் சம்பந்த பட்டுள்ளனரா என்பதை விசாரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தி செனல் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:திருநர்களை அசிங்கப்படுத்துவதா? நெட்பிளிக்ஸுக்கு எதிராக வலுக்கும் போராட்டமும்! பின்னணியும் !