நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. இது ஆங்கிலத்தில் ’The North Atlantic Treaty Organization’ மற்றும் NATO என்றழைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949 ஆம் ஆண்டு இராணுவ கூட்டமைப்பாக உருவாகின. 


நேட்டோ என்றால் என்ன?


இதன் நோக்கம், இந்த ஒப்பந்தத்தில் இணையும் நாடுகளில் எந்த ஒரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இதில், சமீபத்தில் இணைந்த ஃபின்லாந்தோடு சேர்த்து பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து,நார்வே, போர்ச்சுக்கல், அல்போனியா, பெலாரஸ், ஜெர்மனி, போலந்து உள்பட 31 நாடுகள் நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.


நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷியா போர் நடத்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 17 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. 


இந்த நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள லிதுவேனியா நாட்டின் வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இந்த உச்ச மாநாட்டின் 2ஆவது நாளில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். 


தனித்துவிடப்பட்டாரா உக்ரைன் அதிபர்?


அப்போது, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 


அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் வருத்தத்தில் ஏதோ யோசித்து கொண்டிருப்பது போன்றும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 


பல காலமாக உக்ரைன் பிரச்னை நிலவி வந்தாலும், உக்ரைன் நேட்டோவில் இணைய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த போருக்கு காரணமாக அமைந்தது. கடந்த 1960களில், அமெரிக்க ரஷியாவுக்கு இடையே நிலவி வந்த உச்சக்கட்ட பனிப்போருக்கு பிறகு, நடந்த மிக மோசமான மோதலாக மாறியுள்ளது உக்ரைன் போர். இதனால், அமெரிக்க, ரஷிய நாடுகளின் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.


உக்ரைன் திடீரென அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் நெருக்கம் காட்டுவதுதான் ரஷ்யாவின் பிரச்சனையை தந்தது. ஏற்கனவே, ரஷியாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய தலைவலியாக மாறிவிடும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். எனவேதான், நோட்டாவில் உக்ரைன் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.