ரஷ்யாவில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் அதிபராக விளாடிமர் புதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்யாவில் இதற்கு முன் அதிக காலம் அதிபர் பதவி வகித்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை புதின் முறியடித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆனாலும் இங்கு மக்கள் தொகை 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாய்றுக்கிழமை வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பாட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மின்னஞ்சல் மூலமும் மக்கள் வாக்களித்தனர். ரஷ்யாவில் இருக்கும் 11 மண்டலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைந் நடைபெற்று வருகிறது. அதில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகளை புதின் பெற்றுள்ளதாகவும் மீண்டும் அவர் அதிபராக தேர்வாகியுள்ளதாக முதல் கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் ஒருவருக்கு கிடைக்கும் அதிகபடச வாக்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1999 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற புதின் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலங்களில் அதிக முறை ஆதிகாரத்தில் இருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை தற்போது புதின் முறியடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்றும் வரும் நிலையில், ரஷ்யாவில் நடக்கும் அதிபர் தேர்தல் ஆகும். ஆனால் மேற்குலக நாடுகள் ரஷ்ய அதிபர் தேர்தலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதாவது அங்கு வலுவான எதிர்க்கட்சிகளை போட்டியிட முழு அனுமதி வழங்கப்படாது என்றும், சில கட்சிகளை மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் விமர்சனங்கள் முன்வைகப்படுகின்றன. இம்முறையும் அதிபர் புதினை எதிர்த்து வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததே, அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999 இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் அதிபர் பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். அதன் பிறகு மீண்டும் 2012 இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார். அப்போது அவர் அந்த விதியை மாற்றி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என கொண்டு வந்தார். மேலும் அதிபரின் பதிவிக்காலமும் 7 ஆண்டுகளாக நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.