ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
1 லட்சம் வாக்குச்சாவடிகள்:
நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள ரஷ்ய மக்கள் அந்த சிறப்பு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கின்றனர். அதேபோல் மின்னஞ்சல் முறையிலும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்யாவின் 11 மண்டலங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
மீண்டும் அதிபராகும் புதின்?
இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 5-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வலுவான எதிர்கட்சி தலைவர் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் வாக்காளர்கள் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதின், ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2030 வரை அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என புதின் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
CM MK Stalin: விஷ்வகுருவா?.. மவுனகுருவா?.. பிரதமர் மோடியை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்