இணையத்தில் வைரல் வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. இதோ இன்றைய ட்ரெண்டிங் வீடியோவில், முதலையை செருப்பால் பயமுறுத்து விரட்டும் பெண்ணின் வீடியோ இடம்பெற்றிருக்கிறது.


எதே.. என நீங்கள் கேட்பது எங்களுக்கும் கேட்கிறது.


இதைப் படியுங்கள்!


காலங்காலமாக ஒரு கதையை நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என்பது தான் அந்தக் கதை.


அந்தக் கதையை நடிகர் சந்தானம் ஒரு படத்தில் கலாய்த்துகூட விட்டார். அதெல்லாம் உண்மையா என்பதற்கு ஆவணங்கள் இல்லை. ஆனால், இங்கே ஒரு பெண் செருப்பைக் கொண்டு முதலையை விரட்டியடித்துள்ளார். அந்த வீடியோ பதியப்பட்டதிலிருந்து இதுவரை 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதுவும் கடைசியாக செருப்பை அசால்ட்டாக கீழே போட்டுவிட்டு கெத்து காட்டுகிறார் அந்தப் பெண். அந்த சீன் செம்ம மாஸ். இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. தமிழ் சினிமாவுக்கு நாளைக்கே கூட உதவலாம்.


அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சி இதுதான்:


ஒரு நதிக்கரையில் ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறர். நதியில் சற்று தொலைவில் இருக்கும் முதலை அந்தப் பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. திடீரென்று அந்த முதலை கரையில் நிற்கும் பெண்ணை நோக்கி வருகிறது. நீங்களும் நானும் அந்த இடத்தில் இருந்திருந்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட முற்பட்டிருப்போம்.


ஆனால் அந்தப் பெண்ணோ தன்னுடன் நிற்கும் நாய்க்குட்டியை ஒரு சிறு பார்வை பார்த்துவிட்டு தனது காலில் இருந்து ஒரு செருப்பைக் கழற்றுகிறார். ஒரு கையில் செருப்பை மாட்டிக் கொண்டு ரொம்பவே தெனாவட்டாக அந்த முதலையை விரட்டுகிறார். அந்த முதலையும் வந்த வழியே திரும்புகிறது. இதைப் பார்த்தால் இது எப்படி சாத்தியமாயிற்று என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.


இந்த வீடியோ ஃப்ரெட் ஸ்கல்ட் என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்கு ஒரு தாய் தன் காலில் இருந்து செருப்பைக் கழற்றினால் என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.


அந்த வீடியோவை நீங்களும் பாருங்களேன். முதலை வரும் வேகத்தைப் பார்த்தால் பீதி ஏற்படாமல் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணின் அசாத்திய துணிச்சல் அசர வைக்கிறது.இனி எல்லோரும் புலியை முறத்தில் விரட்டிய பழங்கதை பற்றி பேசாமல், முதலையை செருப்பால் விரட்டிய இந்தப் பெண் பற்றி பேசலாம் போல் இருக்கிறது.