விண்ணில் உள்ள தனது செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக நடத்தியது. Direct-ascent anti-satellite, or DA-ASAT missile எனப் பெயரிடப்பட்ட இந்த சோதனை, 1982-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட  Cosmos-1408 என்ற அதன் சொந்த செயற்கோளை குறிவைத்து அழித்தது. 


இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் எந்தவொரு பொறுப்பற்ற ஆபத்தான செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த பூமியின் கோளப்பாதையில் 1,500க்கும் மேற்பட்ட விண்வெளி சிதைவு துண்டுகளை உருவாக்கியுள்ளதாக, அது மேலும் உடைந்து பல சிதைவு துண்டுகளாக உருமாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.


TN Rain Alert: நவம்பர் இன்னும் முடியல.. சென்னை மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக்கை


அமெரிக்கா,ரஷ்யா, சீனா இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. 


இந்தியா:  கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிஷாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் மிஷன் சக்தி என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் சோதனையை இந்தியா  வெற்றிகரமாக சோதனை செய்தது. சுமார் 300 கி.மீ தொலைவில், பிஎம்டி ஏவுகணையின் இமேஜிங் இன்ப்ரா ரெட் சீக்கர் 740 கிலோ எடை கொண்ட மைக்ரோசாப்ட்- ஆர் செயற்கோளை குறிவைத்து அழித்தது.            


சீனா:  2007ம் ஆண்டு பூமிக்கும் 865 கிமீ மேல் சீனா இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.இது ஆயிரக்கணக்கான விண்வெளி சிதைவு துண்டுகளை உருவாக்கி இன்றும் சர்வதேச நிலையத்தை ஒரு சாத்தியமான விண்வெளி மோதல் மூலம் அச்சுறுத்துகிறது.