புறப்படும்போது போயிங் விமானத்தில் இருந்து சக்கரம் கழன்று விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


விமானத்தில் இருந்து விழுந்த டயர்


இந்த வைரலான வீடியோவில், இத்தாலியில் உள்ள டரன்டோவில் இருந்து போயிங் 747-400 ட்ரீம்லிஃப்டர் விமானம் புறப்படும்போது அதன் சக்கரங்கள் கீழே விழுவதைக் காணலாம். இந்தச் சம்பவத்தை பிரேசிலின் ஏவியேஷன் வலைப்பதிவு ஏரோயின் செவ்வாயன்று டரான்டோவில் படம்பிடித்துள்ளது. உலகின் மிக நீளமான சரக்கு விமானமான 180 டன் எடையுள்ள போயிங் ட்ரீம்லிஃப்டரில் இருந்து 100 கிலோ எடையுள்ள விமானச் சக்கரம் தரையில் விழுவதை காட்டும் விடியோ க்ளிக் பார்ப்பவர்களை பதைக்க வைக்கிறது.






ட்விட்டர் பதிவு


"போயிங் 747-400 ட்ரீம்லிஃப்டரின் டயர்களில் ஒன்றில் தீப்பிடித்துள்ளது. புறப்பட்ட பிறகு அதன் சக்கரம் கீழே விழுந்தது" என்று ட்விட்டரில் வீடியோவை வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளது போர்டிங் பாஸ் என்ற ட்விட்டர் பக்கம். இந்த ட்விட்டர் பதிவுடன் டயர் விழும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு பலரால் பகிறப்பட்டு வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: கதறி கதறி அழுத ஜி.பி.முத்து... விடிய விடிய பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து!


வீடியோ பதிவு


விடியோவில் கார்கோ ஜெட் விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து சக்கரம் தளர்ந்து வருவதால் கரும்புகை வருவதைக் காண முடிகிறது. பின்னர் அது கழன்று கீழே விழுந்து தரையில் மோதி மீண்டும் உயரே எழுந்து குதித்து குதித்து வேகமாக சென்றது. காணாமல் போன பகுதி டரான்டோ-க்ரோட்டாக்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக சென்ற அந்த டயர் அதிர்ஷ்டவசமாக யாரையும் காயப்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 






பத்திரமாக தரையிறங்கியது


இந்த சம்பவத்தை Boeing உறுதிப்படுத்தியுள்ளது. "அட்லஸ் ஏர் மூலம் இயக்கப்படும் Dreamlifter சரக்கு விமானம் இன்று (அக்டோபர் 11) காலை இத்தாலியில் உள்ள Taranto-Grottaglie விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது, ​​தரையிறங்கும் கியரில் இருந்து வீல் அசெம்பிளியை இழந்தது. ஒரு டயர் விழுந்தாலும் சார்லஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பத்திரமாக தரையிறங்கியது", என்று தெரிவித்துள்ளது.