சமீபத்தில், மிருகக்காட்சிசாலையில் ஒரு சிறுமி, அங்கு இரும்பு வேலிக்குள்ளே அடைக்கப்பட்டிருந்த குரங்கை தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து, அச்சிறுமியின் தலைமுடியை குரங்கு விடாபிடியாக இழுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் TikTokஇல் பகிரப்பட்ட வீடியோவில், சிறுமி ஒரு கையில் தனது தொலைபேசியுடன் குரங்கை நெருங்கி செல்கிறார். மற்ற குரங்குகள் இரும்பு வேலியில் தொடங்கியபடி, ஆடி கொண்டிருக்கின்றன. சில நிமிடங்களுக்குப் பிறகு, குரங்குகளில் ஒன்று அடைப்பின் சங்கிலி இணைப்பு வேலி வழியாக வந்து, சிறுமியின் தலைமுடியை பிடித்து கொள்கிறது. பின்னர், அந்த சிறுமி கத்த தொடங்குகிறார்.
அப்போது ஒரு சிறுவன் குரங்கிடம் இருந்து சிறுமியை இழுத்துச் செல்கிறான். விலங்குகளை துரத்தும் முயற்சியில் தனது சட்டையை கேயில் ஏந்தி குரங்கை தாக்க முயல்கிறார். நல்வாய்ப்பாக, அந்த சிறுமி தப்பி விடுகிறார்.
இருப்பினும், சில நொடிகளிலேயே அச்சிறுமி கூண்டில் இருந்த குரங்குகளைக் கடந்து செல்கையில், மீண்டும் ஒருமுறை அவரது தலைமுடியை குரங்கு பிடித்து இழுக்கிறது. அந்த நேரத்தில், இரண்டாவது குரங்கு வேலி வழியாக வந்து சிறுமியின் முடியின் பின்புறத்தைப் பற்றிக் கொள்கிறது.
வீடியோவின் முடிவில், சிறுமி நல்வாய்ப்பாக தப்பி விடுகிறார். குரங்குகளிடம் இருந்து அவர் தன்னை தானே விடுவித்துக் கொள்கிறார். இச்சம்பவம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.
இதற்கிடையில், மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் கூண்டுகளை பார்வையாளர்கள் தொடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நன்றாகத் தோன்றினாலும், அவற்றுடன் நெருங்கி பழகுவது எப்போதும் நல்லதல்ல.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்