தைவான் பிரபலம்:
தைவான் பிரபலம், நடிகரும், பாப் பாட்கருமான ஜிம்மி லின் ஓட்டி வந்த கார் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தின் மீது பெரும் விபத்துக்குள்ளானது. கடந்த வெள்ளிக்கிழமை ஜிம்மி லின்னும், அவரது மகனும் தானியங்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, சாலையில் சென்று கொண்டிருந்த தானியங்கி காரான டெஸ்லா, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் மளமளவென தீப்பற்றி எறியத் தொடங்கியது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள், ஜிம்மி மற்றும் அவரது மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜிம்மி பலத்த காயமடைந்துள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா சர்ச்சை:
டெஸ்லா நிறுவனமானது, தானியங்கி காரை உற்பத்தி செய்து வருகிறது. டெஸ்லாவின் தானியங்கி காரானது, சில நேரங்களில் தானியங்கி சரியாக இயங்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தைவான் பிரபலமும் கார் விபத்துக்குள்ளாயிருப்பது, டெஸ்லாவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜிம்மி, கார் ரேசர் என்றும் கூறப்படுகிறது. இதனால பலரும் டெஸ்லாவை மீது தான் அதிகம் தவறு இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்