குரங்குகள் புத்திசாலியான விலங்குகள் . எப்போதுமே அவற்றின் செய்கைகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும் . சில கோவில்கள் அல்லது சுற்றுலா தளங்களில் நாம் அதிகமாக குரங்குகளை பார்க்க முடியும் . அவை அந்த வழியாக செல்லும் பயணிகளை குறி வைத்து அவர்களிடம் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்கின்றனர். சில நேரங்களில் திருடவும் செய்கின்றன. பயணிகளிடம் உணவு ஏதாவது கிடைக்குமா என வரும் குரங்குகள் , வேண்டுமென்றே சேட்டை செய்வது போல அவர்களில் மொபைல் , சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆவதையும் பார்த்திருக்கிறோம் . அப்படித்தான் இஒரு நபரின் பையில் இருந்த உணவை குரங்கு ஒன்று  அவருக்கு தெரியாமல் திருடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 







‘waowafrica’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ,ஒரு நபர் குரங்கை நோக்கி முதுகைக் காட்டி அமர்ந்திருக்கிறார்,. முதுகில் பையை மாட்டியிருக்கிறார். குரங்கு அவரிடம் இருந்து பொருட்களை எடுக்க போகிறது என்பதை அறிந்தவராகத்தான் இருக்கிறார் என நினைக்கிறேன். என்னதான் செய்கிறது என பார்ப்போமே என இருக்கிறார் போலும். அதனை அருகில் இருந்தவர் வீடியோவாக எடுக்கிறார்.  கருப்பு நிற பையில் , ஸிப்பை திறந்து ஏதாவது உணவு இருக்குமா என தேடுகிறது. முதலில் திறந்த ஸிப்பில் உணவு ஏதும் இல்லை என்றதும் , அடுத்த ஸிப்பை திறந்து பார்க்கிறது. அதில் ஒரு ஆப்பிள் பழம் இருக்கவே அதனை எடுத்துக்கொண்டு , எஸ்கேப் ஆகிவிடுகிறது. இதனை பார்ப்பதற்கு ஏதோ மனிதன்தான் ஆப்பிளை எடுத்துக்கொண்டு செல்கிறான் என்பது போல இருக்கிறது.



இந்த வீடியோவை இதுவரையில் 103k அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். மேலும் சிலர் குரங்கு திருட்டில் எக்ஸ்பர்ட்டாக இருக்கும் போலவே என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.