இராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் தற்போது அரசராக பதவியேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த கையெழுத்து நிகழ்வின் போது மன்னர் சார்லஸ் பேனா மை கசிந்ததால் அவர் எரிச்சலடைந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது வெள்ளிக்கிழமை கார்டிஃபின் நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் பொதுமக்களுக்கு கை கொடுத்து அவர்களின் அன்பை பெற்றுக்கொண்டார். அப்போது அரச நலன்விரும்பி பெண் ஒருவர், மன்னர் சார்லஸிற்கு பேனா ஒன்றை பரிசாக அளித்தார். பேனாவை பெற்றுக்கொண்ட சார்லஸ் அதனை பார்த்து முதலில் எதற்கு இது என குழப்பமடைவது போல இருக்கிறது. பின்னர் அந்த பெண்ணை நோக்கி” எதற்காக இது? ” என்பதை போல பார்க்க.. அதற்குள்ளாகவே அந்த பெண் “ ஒரு வேளை தேவைப்படலாம் “ என்கிறார் அந்த பெண். உடனே அங்கிருந்தவர்களும் அதையே "just in case " என கூற , சார்லஸ் புரிந்தவராக சிரிக்கிறார். உடனே அங்கிருந்த மக்கள் கர ஒலி எழுப்புகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு அயர்லாந்தில் உள்ள அவர் ஹில்ஸ்ப்ரோ (Hillsborough) கோட்டையில் கையெழுத்து நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அப்போது மன்னர் சார்லஸ் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டபோது அவர் தவறான தேதியை எழுதினார். பின்னர் கையில் வைத்திருந்த பேனாவின் மை கசிய துவங்கியது. மன்னர் சார்லஸின் விரல்களில் பேனா மை ஒட்டிக்கொள்ள இதனால் எரிச்சலடைந்த மன்னர் , பேனாவை அருகில் இருந்த தனது மனைவியும் அரசியுமான கமிலாவிடம் கொடுத்துவிட்டு இந்த பேனாவை நான் வெறுக்கிறேன் . “ அவர்கள் என்ன செய்கிறார்கள். என்னால் இதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை “ என கடிந்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த அரண்மனை அதிகாரி ஒருவரின் கைக்குட்டையில் பேனாவை துடைப்பது போல தனது கைவிரல்களையும் துடைத்துக்கொண்டார் சார்லஸ்.