அமெரிக்காவில் வசித்து வரும் இளம்பெண் கிரிஸ்டியானா மகுஷென்கோ. இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் அவர் அழகி போட்டியில் அழகிகள் நடந்து வரும் கேட்வாக்கை நீருக்கு அடியில் நடந்து வருகிறார். அதுவும் தண்ணீருக்கு அடியில் தலைகீழாக நடந்து வருகிறார். இது பார்க்கும் பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், அந்த வீடியோவில் தலைகீழாக நடந்து வரும் கிறிஸ்டியானா நீருக்கு அடியில் உள்ள கைப்பையை எடுத்துக்கொண்டு மீண்டும் தலைகீழாக நடந்து செல்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் இதை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ உண்மைதானா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவை பதிவிட்ட கிறிஸ்டியான சிங்க்ரோனிஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் நீரில் நடனம் ஆடும் கலைஞர். இந்த பிரிவில் விளையாட்டுப் போட்டிகளும் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கிறிஸ்டியானா நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். கிறிஸ்டியானா ஜூலை மாதம் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். கிறிஸ்டியானாவை இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நீருக்கு அடியில் நடனம் ஆடுவது போலவும், நீருக்கு அடியில் மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் நடன அசைவுகளையும் ஆடி அசத்தியுள்ளார். தண்ணீ்ர அவரது வீடியோக்களின் கீழ் பார்வையாளர்கள் தங்களது சந்தேகங்களை அவரிடம் கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : Video : பதைபதைக்கும் வீடியோ.. பிரபல வால்மார்ட் கட்டடத்தை இடிக்கப்போவதாக மிரட்டல்... விமானத்தில் வட்டமிடும் விமானி...அமெரிக்காவில் பரபரப்பு!
மேலும் படிக்க : Bristol Zoo Gardens : உலகின் பழமை வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் (Zoo) ஒன்று பிரிஸ்டல்...மூடப்படுவது ஏன் தெரியுமா?