அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் மாகாணத்தை விமானத்தைக் கொண்டு இடிக்கப்போவதாக விமானி ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்றைத் திருடிய விமானி ஒருவர் வால்மார்ட் கட்டடத்தை இடிக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அமெரிக்காவின், மிசிஸிப்பி மாகாணத்தில் உள்ள டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் மீது இந்த விமானம் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டே உள்ள நிலையில், வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக கட்டடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.






மேலும் முன்னதாக வால் மார்ட் வணிக வளாகத்தைச் சுற்றி காவலர் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.






இந்த பரபரப்பான சூழலில் விமானியுடன் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


முன்னதாக அமெரிக்க நேரப்படி அதிகாலை 5 மணிக்கு விமானி கட்டடத்தை வட்டமடித்தது குறித்து முதலில் எச்சரிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அவசர அழைப்பு எண்ணான 911க்கு அழைத்து வால் மார்ட் கட்டடம் மீது தான் மோத உள்ளதாக விமானி மிரட்டியுள்ளார்.


 






இந்நிலையில், முன்னதாக விமானி 29 வயது நிரம்பியவர் என்றும், அவர் திருடிய விமானம் அமெரிக்காவின் தென் கிழக்கு ஏவியேஷனுக்கு சொந்தமான சிறிய ரக பீச் கிராஃப்ட் கிங் ஏர் விமானம் என்றும் இந்த கிங் ஏர் விமானம் மணிக்கு 206 மைல் வேகத்தில், 1,100 அடி உயரத்தில் பறக்கக்கூடியது என்றும் தகவல்கள் வந்துள்ளன.


மேலும் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தின் அரசு அலுவலர்கள் இந்த ஆபத்தான சூழலை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அம்மாநில கவர்னர் டேட் ரீவ்ஸ் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!