ஆட்டுக்குட்டியின் மீது அமர்ந்து அழகாய் பெர்ரி பழங்களைச் சாப்பிட்ட குரங்கின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு 7 லட்சத்திற்கு அதிகமான லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறது.
சமீப காலங்களாக இணையத்தில் டிரெண்ட் ஆகி வரக்கூடிய வீடியோக்கள் பெரும்பாலும் விலங்குகள் செய்யும் குறும்புத்தனமாக இருக்கிறது. அதிலும் எதார்த்தமாக அவர்கள் செய்யும் அனைவரையும் ரசிக்க வைப்பது தான் ஆச்சரியமான ஒன்று. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருவதோடு 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. அந்த வீடியோவை இப்ப நாமும் பார்க்கலாம்...
ஒருவர் தன் கை முழுவதும் பெர்ரிப்பழங்களை வைத்துக்கொண்டு, ஆட்டுக்குட்டிக்கு புரியும் வகையிலான பாஷையில் அவர் அழைக்கிறார். உடனே அவரது அழைப்பைக்கேட்ட, அந்த ஒரு ஆட்டுக்குட்டி மனிதனை நோக்கி செல்கிறது. நம்முடைய அருகில் வரும் போது தான் தெரிகிறது.. அந்த ஆட்டுடன் குறும்புத்தனமான குரங்கு ஒன்றும் உடன் இருந்தது. அந்த நபரின் அருகில் வந்ததுமே கையில் வைத்திருந்த பெர்ரியை அழகாக ஆட்டுக்குட்டி சாப்பிடத்தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டிய குரங்கு கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருந்த பழத்தை எடுத்து சாப்பிடத்தொடங்கியது. சிறிது நேரத்திலேயே ஆட்டின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக குரங்கு அமர்ந்து க்யூட்டாக சாப்பிட ஆரம்பித்தது.
ஒரே இனத்தைச்சேர்ந்த விலங்குகளே சில சமயம் சாப்பிடும் போது சண்டையிடுவதைப்பார்த்திருப்போம். ஆனால் இந்த ஆடு மற்றும் குரங்கு சேர்ந்து சாப்பிட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தததோடு சோஷியல் மீடியாவிலும் வைரலாவிவருகிறது. மேலும், “ என் வாழ்க்கையில நான் பார்த்த அருமையான விஷயம்“ என்றும் நல்ல நட்பின் உதாரணம் என்பது போன்ற பல கருத்துக்களைச் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் சில நாள்களிலே இந்த வீடியோ ட்விட்டரில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்யைாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான அலைக்குகளையும் பெற்றுள்ளது. இதோடு 150,000 முறைக்கு மேல் மறு ட்வீட் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.