ஆழ்கடல் உலகம் அதி அற்புதமான, வியக்கத்தக்க உயிரினங்கள் நிறைந்தது. உலகின் முக்கால்வாசி உயிரினங்கள் ஆழ்கடலில் வசிப்பதாகவும், இதுவரை கண்டறியப்படாத உயிரினங்கள் ஆழ்கடலை ஆக்கிரமித்துள்ளதாகவும் அறிவியல் கூறுகிறது.
அன்பு பாராட்டும் ஆக்டோபஸ்
அந்த வகையில் இதுவரை கண்டறியப்பட்ட ஆழ்கடல் உயிரினங்களில் மனிதர்களை ஆச்சர்யப்படுத்தக்கூடிய புதிரான உயிரினம் ஆக்டோபஸ்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆக்டோபஸின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் அடிப்பது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் முன்னதாக சிறிய ஆக்டோபஸ் ஒன்று ஸ்கூபா டைவர் ஒருவருடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
வைரல் வீடியோ
ஸ்கூபா டைவ் செய்யும் நபருடன் பழகும் ஆக்டோபஸ், அந்நபரின் உள்ளங்கைக்குத் தாவுவதும், ஸ்கூபா டைவ் செய்பவர் ஆக்டோபஸின் தலையை மெதுவாக வருடிக் கொடுப்பதும் அதற்கு ஆக்டோபஸூம் இசைந்து விளையாடுவதுமென காண்போரை இந்த வீடியோ மெய் சிலிர்க்க வைக்கிறது.
ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1.9 மில்லியன் பார்வைகளையும் 96,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 13,000 ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’மை ஆக்டோபஸ் டீச்சர்’ படத்தை நினைவுபடுத்தும்படியாக இந்த வீடியோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்