விமானத்தில் சண்டை:


விமானத்தில் பயணிகளிடையே சண்டை ஏற்படுவது தற்போது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில், தற்போது பங்களாதேஷ் விமானத்தில் இரண்டு பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






சட்டையை கழட்டி சண்டை:


அதன்படி, விமானத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபருக்கும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபருக்கும் சண்டை ஏற்பட்டது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், பின் இருக்கையில் இருந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதில் 20 வயதுடைய நபர் சட்டை இல்லாமல் மற்றொரு பயணியை கடுமையாக தாக்குவதாக வீடியோவில் தெரிகிறது.


மற்ற பயணிகள் இதை தடுக்க முயன்றபோது, அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விமானத்தில் இருக்கு ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து இருவருக்குமான சண்டை நிறுத்தப்பட்டது. இதற்கான காரணமானது இருக்கைக்கு வாக்குவாதம் ஏற்பட்டதுபோல் தெரிகிறது.  இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


உரிய நடவடிக்கை தேவை:


இந்த வீடியோவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என ஒருவர் தெரிவித்திருந்தார். இதுபோன்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.






மற்றொரு சம்பவம்


சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. இதற்கு முன்பாக, தாய்லாந்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், இருக்கையை சரிசெய்ய மறுத்த பயணியை மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை வீடியோவில் காணலாம். விமானத்தில் இருந்த ஊழியர்களும் மற்றவர்களும் தாக்குதலை நிறுத்த முயல்கின்றனர். அந்த பயணியும், தன்னை தற்காத்து கொள்ள முயல்கிறார்.


இந்த சம்பவம் குறித்து கேப்டனுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சண்டை நிறுத்தப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட பயணிகள் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புவதையும், விமானம் கொல்கத்தாவுக்குப் புறப்படுவதையும் பணியாளர்கள் உறுதி செய்தனர்.