பெண் ஒருவரின் வாய் வழியே நுழைந்து தொண்டையில் சிக்கியிருந்த 4 அடி நீள பாம்பு மருத்துவரின் உதவியுடன் அகற்றப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ட்விட்டரில் FascinateFlix எனும் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இரண்டு மில்லியன் பார்வையாளர்களையும், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

அப்பெண் தூங்கும்போது அவரது வாய்க்குள் பாம்பு நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி கமெண்டுகளைக் குவித்து வருகிறது.

Continues below advertisement

ஒருபுறம் அச்சத்துடன் நெட்டிசன்கள் கமெண்டுகள் பகிர்ந்து வரும் நிலையில், பெண்ணின் வாயில் இருந்து எடுக்கப்பட்டது டேனியா (Taenia) எனப்படும் பாரசைட் என்றும், அது பாம்பு அல்ல என்றும் ஒரு தரப்பினர் கமெண்டுகள் பகிர்ந்து வருகின்றனர்.

இதே போல் முன்னதாக வெகு சில நொடிகளில் வளர்ந்த முழு மானை மலைப்பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது.

மானை விழுங்கும் மலைப்பாம்பின் வயிற்றை அருகில் நிற்கும் நபர்கள் தட்டிக் கொடுத்து உதவுவதும் (?!) இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.