விலங்குகளாக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி , தனது குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த உயிரினமும் எதிர்த்து போராடத்தானே செய்யும். அப்படியான ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


காட்டு எருமைகள்தான்  சிங்கங்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று. ஏனென்றால் எருமைகள் அதிக இறைச்சி கொண்ட பெரிய விலங்குகள், எனவே சிங்கங்கள் எருமைகளை வேட்டையாட முடிந்தால், அவை சுமார் ஐந்து நாட்களுக்கு வேட்டையாட வேண்டியதில்லை. பொதுவாக மந்தையில் இருந்து பிரிந்த எருமைகளைத்தான் சிங்கங்கள் வேட்டையாடும் . கூட்டமாக இருக்கும் எருமை கூட்டத்தை கண்டால் சிங்கமும் படை நடுங்கும்தான்.இந்த நிலையில் இளம் பெண் சிங்கம் ஒன்று , வழியில் இருந்து தடுமாறி வரும் பிறந்து சில நாட்களே ஆன  காட்டு எருமைக்குட்டியை வேட்டையாட இயல்பாக வந்துக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அறியாத எருமைக்குட்டி சிங்கத்தை கண்டு அஞ்சாமல் இயல்பாக நடந்து செல்கிறது. சிங்கம் எருமைக்குட்டியை தாக்க தயாராகும் பொழுது , எங்கிருந்தோ வேகமாக வந்த அதன் தாய் எருமை ஓடி வந்து சிங்கத்தை விரட்டி ஆபத்தில் இருக்கும் தனது குட்டியை காப்பாற்றுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







‘bilal.ahm4d’ என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ , 56,000 பார்வைகளையும் 1,700 விருப்பங்களையும் பெற்றுள்ளது.



இதே போல குட்டி யானை ஒன்றை சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. ஆனால் இறுதியில் வென்றது என்னவோ யானைதான். Susanta Nanda IFS என்பர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து யானையை தாக்குகிறது. ஓர் நதிக்கரையில் குட்டி யானையை 14 சிங்கங்கள் சேர்ந்து விரட்டுகின்றன. இதை "ஒற்றை யானை 14  சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது... யார் காட்டிற்கு ராஜா? என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் பலர் இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.