கோல்ப் மைதானத்தில் 3 குட்டிக்கரடிகள் விளையாடிய வீடியோ தற்போது 2 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயற்கைச்சூழலில் காலை வேலையினை ரசிப்பது அனைவரும் பிடித்தமான ஒன்று. அதிலும் மிகவும் அழகாக வனவிலங்குள் அங்கு விளையாடுவதைப் பார்க்கும் பொழுது நிச்சயம் மனதிற்கு இதமாகத்தான் இருக்கும். அப்படித்தான் கடந்த வாரம் 3 குட்டிக்கரடிகள் ஒன்று கோல்ப் மைதானத்தில் மிகவும் ஜாலியாக விளையாடியுள்ளது. சிறு குழந்தைகள் போல் அவைகள் விளையாடியது இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
காலை வேளையில் கோல்ப் மைதானத்தில் 3 குட்டிக்கரடிகள் ஜாலியாக விளையாடியது. அதில் குட்டிக்கரடி ஒன்று மைதானத்தில் உள்ள கொடிமரம் ஒன்றினைப்பிடித்து துள்ளிக்குதித்தது. அதேப்போன்று மற்ற 2 கரடிக்குட்டிகளும் சண்டையிட்டுவதுப்போல் ஜாலியாக விளையாடிக்கொண்டதோடு ஒன்றன்பின் ஒன்றாக சென்று மைதனானத்தினைச் சுற்றியது. 40 விநாடிகள் உள்ள இந்த வீடியோவினை டேனி டெரானி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பசுமை வெளியில் வெளியில் விளையாடும் குட்டிக்கரடிகளுக்கு காலை வணக்கம் என கூறியிருந்தார். டிவிட்டரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான இந்த வீடியோ தற்பொழுது 242.3 k பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்த வீடியோவினைப்பார்த்த இணையவாசிகள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, இறுதியில் கரடிக்குட்டிகள் பிக்னிக் சென்று விட்டது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது .There's a kid in all of us., Finally a good use of a golf course என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோடு மட்டுமின்றி இந்த வீடியோ நெட்டிசன்களை ரசிக்கவும் வைத்துள்ளது.