பாகிஸ்தானில் வரும் 14-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு சுதந்திர தின கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு நபர் புதிய வழி ஒன்றை கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார். அவர் செய்த அந்த செயல் அவரை இறுதியில் சிறையில் கொண்டு தள்ளியுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்?


பெஷாவர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுதந்திர தின கொண்டாடத்தை முன்னிட்டு மக்களை பயமுறுத்த ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி ஒரு பயங்கரமான முகக்கவசம் ஒன்றை தயாரித்து அதை வைத்து பொதுவெளியில் மக்களை பயம் காட்டி மகிழ அவர் நினைத்துள்ளார். இதற்காக ஒரு முகக்கவசம் மற்றும் பிரத்யேக உடை ஆகியவற்றை தயாரித்து மக்களை பயமுறுத்த தொடங்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களுக்கு தொந்தரவு விளைவித்த குற்றத்திற்காக அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விளையாட்டாக செய்ய நினைத்த காரீயம் தற்போது அவரை சிறையில் தள்ளியுள்ளது. 






இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த நபர் குறித்தும் அவர் முகக்கவசம் அணிந்து இருப்பது போலவும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் இந்தச் சம்பவமும் வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் பெஷாவர் பகுதியில் இதுபோன்று முகக்கவசம் வைத்து மக்களை பயமுறுத்தும் செயல் ஒன்றும் புதிதல்ல. 






ஏற்கெனவே கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு நபர் பயங்கரமான முகக்கவசம் அணிந்து கொண்டு மக்களை பயமுறுத்தி வந்தார். அவரையும் பெஷாவர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழா மற்றும் பண்டிக்கை கொண்டாட்டங்களின் போது முகக்கவசம் அணிந்து மக்களை பயமுறுத்துவது அங்கு வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தரப்பில் தீவிர விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:ஏன் கிளம்புச்சு? ஏன் நடந்துச்சு? மீண்டும் வாழ்விடம் திரும்பும் வைரல் யானைகள்!