Viral Video: பூனைக்குட்டியின் உயிரை காப்பாற்ற சாக்கடையில் கையை விட்ட சிறுமி...! வைரலாகும் வீடியோ..!

வெளிநாட்டில் பூனைக்குட்டியை காப்பாற்ற சாக்கடைக்குள் கையை விட்ட சிறுமியின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். நாய்களுக்கு அடுத்தபடியாக வீடுகளில் செல்லப்பிராணியாக பூனைகள் தான் உள்ளது. வெளிநாட்டில் நாய்களுக்கு இணையாக வீடுகளில் பூனைகள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் பூனைக்குட்டி ஒன்று சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டது. அந்த சாக்கடைக்கு மேலே நடைபாதை உள்ளது. பூனை சிக்கிக்கொண்ட ஒரு சிறுமியும் அவளது நண்பர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இதையடுத்து, பூனைக்குட்டியை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். அந்த சாக்கடை செல்லும் வழியில் மழைநீர் சாக்கடைக்கு செல்வதற்காக சிறிய ஓட்டை இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். உடனே அந்த ஓட்டையில் அங்கிருந்த சிறுமி ஒருவர் தனது கையை உள்ளே விட்டுள்ளார்.

சிறுமி தனது கையை நீட்டி உள்ளே சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை தேடியுள்ளார். பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பூனைக்குட்டியை பிடித்து வெளியே காப்பாற்றியுள்ளார். சிறுமி பூனைக்குட்டியை எடுத்து வெளியே எடுத்தவுடன் சுற்றியிருந்த மற்ற சிறுமிகள் ஆரவாரம் செய்து அசத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கே? எப்போது? எடுக்கப்பட்ட என்ற விவரம் வெளியாகவில்லை.

சாக்கடைக்குள் கையை விட்டு பூனைக்குட்டியை காப்பாற்றிய சிறுமியை பலரும் இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க : Afghanistan Flood: தத்தளிக்கும் ஆப்கான்..! கட்டுக்குள் வராத காட்டாற்று வெள்ளம்..! 31 பேர் உயிரிழப்பு..!

மேலும் படிக்க : சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ட்ரோன் தாக்குதல்... என்ன நடந்தது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement