திங்களன்று கிழக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்ப்பு போராளிகளால் நடத்தப்படும் ராணுவ தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், எந்த வித உயிர்சேதமும் நிகழவில்லை என்றும் பொருள்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


 






சிரியா, ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் அல்-டான்ஃப் ராணுவ தளத்திற்கு அருகாமையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல்-டான்ஃப் ராணுவ தளத்தில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டு துருப்புக்கள் ஐஎஸ் குழுவில் இருந்து வரும் போராளிகளை எதிர்கொள்வதற்காக சிரிய படைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.


தெஹ்ரானில் இருந்து லெபனான் வரை நீண்டு செல்லும் முக்கிய இணைப்பு சாலையில் இந்த தளம் அமைந்துள்ளது. இது ஈரானிய ஆதரவுப் படைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 






தாக்குதல் குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "திங்கட்கிழமை காலை அல்-டான்ஃப் கேரிஸன் அருகே ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மகவீர் அல்-தௌரா என்ற எதிர் கிளர்ச்சி குழுவுடன் இணைந்து கூட்டு துருப்புகள் பதிலடி அளித்துள்ளது.


துருப்புக்கள் ட்ரோன் தாக்குதலின் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்களில் ஒன்றை வெற்றிகரமாக ஈடுபடுத்தியது. இரண்டாவது ட்ரோன் எதிர் படைகளின் வளாகத்திற்குள் வெடித்தது. ஆனால், இதில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. சேதம் ஏற்படவில்லை. மற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை.


ஒருங்கிணைந்த கூட்டுப் சிறப்பு படையின் தளபதி ஜான் பிரென்னன், ட்ரோன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "இத்தகைய தாக்குதல்கள் அப்பாவி சிரிய குடிமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஐஎஸ்ஐஎஸ்-இன் நீடித்த தோல்வியைத் தக்கவைக்க எங்கள் கூட்டு படைகளின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை சிறுமைப்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண