Viral Video : குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடுவானில் சண்டை
குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேற்று இரவு ஒரு விமானம் புறப்பட்டது. அதில் 150க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் புறப்பட்டது. அப்போது, விமானத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை வெடித்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த இரண்டு பயணிகள் கையில் கண்ணாடி பாட்டில்களை வைத்துக் கொண்டு விமானத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
விமான பணிப் பெண்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களை அதனை கண்டுகொள்ளாமல் பயங்கரமாக சண்டையிட்டுள்ளனர். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, விமானம் அவசரமாக குயின்ஸ்லாந்தில் தரையிறங்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட சண்டை தொடர்பாக விமான பணிப்பெண் புகார் அளித்துள்ளார் தெரிகிறது. இதனை அடுத்து, விமானம் குயின்ஸ்லாந்தில் தரையிறங்கியதும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
இதனை அடுத்து, விமானம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. மீண்டும் அங்கிருக்கும் இரண்டு பயணிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதும் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பயணிகள் ஒருவரைக்கொருவர் சண்டையிட்டதால் விமனாத்தின் ஒரு பக்கத்தின் ஜன்னல் சேதம் அடைந்துள்ளது.
குயிஸ்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நான்கு பயணிகள் சண்டையிடும் சம்பவத்தை சக பயணிகள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலியா காவல்துறை உறுதி செய்துள்ளது.
மேலும், பொது சொத்தை சேதப்படுத்துதல், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளுதல், வன்முறையில் ஈடுபட்டதால் ஒரு பெண் உட்பட 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Whatsapp New Feature: நான்கு ஃபோன்களில் ஒரே அக்கவுண்ட்; வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி..