கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த பயிற்சி விமான விபத்துக்குறித்து தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பறவைகள்தான் விபத்துக்கு காரணமாக இருக்குமென தெரியவந்துள்ளது.


அமெரிக்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வானில் பறந்தபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டு கீழே இருந்த 3 மாடி வீட்டில் மோதி விபத்திக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விமானத்திலிருந்த மாணவரும், பயிற்சியாளரும் விமானத்தில் இருந்து தப்பினர். வீடுகளில் விமானம் மோதியதால் அங்கு வசித்த 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்குறித்து அப்போதே விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 






பறவைகள் திடீரென விமானத்தைச் சுற்றி பறப்பதும் அதில் ஒரு பறவை விமான எஞ்சினிலில் சிக்குவதும் தெரியவந்துள்ளது. பறவை மோதியதும் போர் விமானம் தீப்பற்றி எரிகிறது. உடனடியாக விமானி தரையிறக்க முயற்சி செய்வதும் ஆனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் விமானம் தரையில் மோதுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஜெட் விமானம் வானத்தில் இருந்து விழுந்ததில் 41 மில்லியன் பவுண்டுகள் சேதம் ஏற்பட்டதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.


முன்னதாக, ஜூன் மாதம் ஜெனிவா-பாரிஸ் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானி அறையில் சண்டையிட்டதற்காக ஏர் பிரான்ஸ் அவர்களது இரண்டு விமானிகளை சஸ்பெண்ட் செய்தது


யாருக்கும் பாதிப்பில்லை


இருவரும் சண்டை இட்டுக்கொண்டிருந்த போதிலும், விமானம் தொடர்ந்து பறந்துகொண்டிருந்தது. மேலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியது என்று தகவல்கள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட சர்ச்சை மற்ற விமானங்கள் எதையும் பாதிக்கவில்லை என்றும் விமான அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சுவிஸ் லா ட்ரிப்யூன் நாளிதழின் அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்பட்ட தகராற்றில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு உள்ளனர். ஒருவரையொருவர் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டு உள்ளனர்.


விமானி அறையில் சண்டை


பின்னர் இவர்கள் சண்டையில் கேபின் குழுவினர் தலையிட்டுள்ளனர். மீண்டும் சண்டை விடாமல் இருக்க ஒரே ஒரு குழு உறுப்பினர் மட்டும் விமானிகளுடன் விமானி அறையில் பயணம் முழுவதும் இருந்துள்ளார் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சில ஏர் பிரான்ஸ் விமானிகள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதில் தீவிரம் காட்டுவதில்லை என்று பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான BEA கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு சண்டை பற்றிய செய்தி வெளிவந்தது.