Maipi - Clarke Video: 21 வயதான இளம்பெண் எம்.பி:


நியூசிலாந்து நாட்டில் முதல்முறையாக 21 வயதான இளம்பெண் ஒருவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதன் மூலம் மௌரி (Maori) பழங்குடி இனத்தைச் சேர்ந்த மைபி கிளார்க் (Maipi-Clarke) தான் நியூசிலாந்து நாட்டிலேயே முதல் எம்.பி ஆவார். நியூசிலாந்து நாட்டின் 170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக 21 வயதான இளம்பெண் எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறார் மைபி கிளார்க் (Maipi-Clarke)


முதல்முறையாக, நாடாளுமன்றத்தில் எம்.பி. மைபி கிளார்க் உரையாற்றினார். அப்போது, மௌரி பழங்குடியினரின் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை முழங்கிவிட்டு தனது உரையை  பேசி, நாடாளுமன்றத்தையே அதிர வைத்துள்ளார். அவர் பேசியதாவது, நான் உங்களுக்காக வாழ்வேன். உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.


நாடாளுமன்றத்தையே அதிர வைத்த மைபி கிளார்க்:


வாழ்நாள் முழுவதும் வகுப்பறையில் பின்னே அமர்ந்திருக்கும் குழந்தைகள், பல தலைமுறையாக தங்கள் தாய்மொழியைக் கற்க ஏங்கித் தவிக்கின்றனர். தற்போது, திறந்த மனதுடன் தாய்மெைாழி உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் இனிமே தாய்மொழி கற்றுக் கொள்ளலாம். நீங்கள்  அதற்கு சரியானவர்கள். என்னை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. மௌரி மக்களின் பாதுகாவலராகப் பார்க்கிறேன். மௌரி மக்களின் குரல் என்றும் கேட்கப்பட வேண்டும்" என்று கூறினார். 


இவர் பேசிய வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.  மௌரி பழங்குடியினரின் ஆதிகால பழக்கங்களில் ஒன்று ஹக்கா நடனம். இந்த  நடனம் மற்றும் பாடலுடன் உடல் அசைவுகளை அசைத்து மைபி கிளார்க் வெற்றி முழக்கமிட்டு, பேசிய வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. 












மைபி கிளார்க் பேசுவதை அங்கிருந்த எம்.பிக்கள் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இவரின் வெற்றி முழக்கம் உலகம் முழுவதும் வைரலாகி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


யார் இந்த மைபி கிளார்க்?


மைபி கிளார்க் ஹன்ட்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர். நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கும் ஹாமில்டனுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அங்கு மௌரி சமூகத் தோட்டத்தை நடத்தி வருகிறார். அங்கு குழந்தைகளுக்கு மௌரி மக்களின் விவசாயத்தை பற்றி கற்றுக்கொடுத்து வருகிறார்.  


மைபி கிளார்க் எம்பி திடீர் அரசியல்வாதி இல்லை. 1872-ஆம் ஆண்டு இவரது தாத்தா வயர்மு கட்டேனே நியூசிலாந்தின் மௌரி பகுதியின் முதல்வராக இருந்தார். அவரது அத்தை ஹனா தே ஹேமாரா, நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.  ஹாமில்டனில் நடந்த அடிமைத்தனம் மற்றும் மௌரி பழங்குடியினர்கள் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


MV Lila Norfolk: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்.. சிக்கிய 15 இந்தியர்கள் கதி என்ன?