MV Lila Norfolk: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்தியா கடற்படை! 15 இந்தியர்கள் சேஃப்!

சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை ஐ.என்.எஸ். சென்னை போரக்கப்பல் மீட்டது. கப்பலில் சிக்கிய 15 இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Continues below advertisement

15 இந்தியர்கள் உள்பட சென்ற சரக்கு கப்பலை கப்பலை சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Continues below advertisement

இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர். இதனைத் தொடர்ந்து ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர் கப்பல், ஐரோப்பிய யூனியன் கடற்படை விரைந்தது. இந்த சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். 

கப்பல் மீட்பு:

இன்று, கடத்தப்பட்ட 'எம்வி லீலா நோர்ஃபோக்' என்ற சரக்குக் கப்பலின் நிலையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்தது. இதையடுத்து, இந்திய கடற்படை அதிகாரிகளுடன் கமாண்டோக்கள் அதிரடியாக கடத்தப்பட்ட கப்பலுக்குள் இன்று நுழைந்தனர். அவர்கள் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்டனர். அந்த கப்பலில் இருந்த 15 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 

முன்னதாக, அந்த கப்பலில் உள்ள 15 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலைமையை கண்காணிக்கவும் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை கடத்தப்பட்ட இடம் நோக்கி விரைந்தது. 

நேற்று மாலை சுமார் ஐந்து முதல் ஆறு அறியப்படாத ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறுவதைக் குறிக்கும் வகையில் தகவல் ஒன்று கப்பலில் இருந்து அனுப்பப்பட்டதாக கடற்படை தரப்பில் முதலில் தகவல் வெளியானது. தற்போது, சரக்கு கப்பல் மீட்கப்பட்ட நிலையில், அதே பகுதியில் சென்று கொண்டிருக்கும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்லவும், சந்தேகமான நிலையில் நிலவரம் இருந்தால் உடனடியாக தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பல் கப்பல் பிரேசிலின் போர்டோ டு அகுவிலிருந்து பஹ்ரைனில் உள்ள கலீஃபா பின் சல்மான் துறைமுகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: ரெய்டு நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்; சராமாரியாக தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 

Continues below advertisement