காகங்கள் எப்போதும் சுற்றுச்சூழலுக்கு சில முக்கியமான விஷயங்களை செய்து வருகின்றன.அந்தவகையில் தற்போது காகங்களை மேலும் ஒரு சுற்றுச்சூழல் தொடர்பான விஷயத்திற்கு ஒரு அமைப்பு பயன்படுத்தி வருகிறது. அதாவது பயன்படுத்தி போடப்பட்ட சிகரெட் துண்டுகளை எடுக்க காகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


ஸ்வீடன் நாட்டில் அமைந்துள்ள ஸ்வீடிஸ் கோர்னா என்ற அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பான சில நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் சிகரெட் பஞ்சுகளை எடுக்கும் பணியில் அது ஈடுபட்டுள்ளது. பொதுவாக அங்கு மக்களைவைத்து சிகரெட் பஞ்சுகளை சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இதற்கு அதிகமாக செலவாகி வந்துள்ளது. 


 


இந்நிலையில் இந்த பணியைச் செய்ய காகங்களை அந்த அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. ஏனென்றால், காகங்கள் எப்போதும் ஒரு விஷயத்தை எளிதில் கற்றுக் கொள்ளும். அத்துடன் ஒரு காகத்திடம் இருந்து மற்றொரு காகம் எளிதாக கற்று கொள்ளும் தன்மை உடையது. இதன்காரணமாக அந்த அமைப்பு காகங்களை தேர்ந்தெடுத்து உள்ளது. 


 


அதன்படி காகங்களை பயன்படுத்தி சிகரெட் பஞ்சு துண்டுகளை உணவு பொருட்களில் இருந்து எடுக்கும் பயிற்சி இந்த அமைப்பு அளித்து வருகிறது. இந்தப் பயிற்சி பெறும் காகங்கள் மிகவும் வேகமாக சிகரெட் துண்டுகளை எடுத்து வருகின்றன. மேலும் அவை எளிதாக சிகரெட் பஞ்சு துண்டுகளை காகங்கள் கண்டறிந்து எடுப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு காகங்களை பயன்படுத்துவதால் இதற்கு தேவைப்படும் செலவு 75 சதவிகிதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 






 


மேலும் இந்தப் பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சிகரெட் பஞ்சு துண்டுகள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும். மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள நச்சு பொருளும் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவற்றை நீக்குவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்ல விஷயமாக அமையும். 


 


எனினும் இந்த வீடியோவை பார்த்த சிலர் காகங்களை மனிதர்கள் செய்யும் பிழைகளை  சரி செய்ய பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்று என்று கூறி வருகின்றனர். உலகம் முழுவதும் 4.5 டிரில்லியன் சிகரெட் பஞ்சு துண்டுகள் கண்டு எடுக்கப்பட்டிருந்தன. 


மேலும் படிக்க: 16 தூண்களில் வைக்கப்பட்ட வெடி! ஒரே நொடியில் சுக்குநூறாக நொறுங்கிய பிரம்மாண்ட பாலம்!