ஜெர்மனியின் வடக்கு ரியன் மற்றும் வெஸ்ட்ஃபாலியா பகுதிகளை இணைக்கும் வகையில் 70 அடி உயரத்தில் ஒரு பழைய பாலம் ஒன்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்தது வந்தது. இந்த பகுதியை இணைக்க புதிய பாலம் ஒன்றை கட்ட அந்தப் பகுதி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய பாலத்திற்கான பணிகள் தற்போது நிறைவு பெற உள்ள நிலையில் இந்த பழைய பாலத்தை நேற்று தகர்க்க முடிவு செய்துள்ளது. 


 


இந்த பாலத்தை தகர்க்க சுமார் 120 கிலோ வெடிப்பொருட்களை பயன்படுத்தியுள்ளது. சுமார் 70 அடி உயரத்தில் பல அடுக்கு கொண்டு அந்த பாலம் நேற்று காலை ஜெர்மனி நேரப்படி காலை 11 மணிக்கு தகர்க்கப்பட்டது. இந்த பாலம் சுமார் 55 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தை இடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்த பாலத்தின் இடிபாடுகள் சரியாக தரையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த பாலத்தின் 16 பில்லர்களும் சரியாக இடிந்து விழும் வகையில் வெடிப் பொருள் வைக்கப்பட்டிருந்து. ஜெர்மனி நாட்டில் இதுவரை இந்த உயரத்தில் எந்த ஒரு பாலம் தகர்க்கப்பட்டதில்லை. ஆகவே இந்த பாலத்தை தகர்ப்பதை பல மக்கள் ஆவலுடன் பார்த்தனர். இந்தப் பாலத்தை இடிக்கும் போது புதிய பாலத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் இடிக்கப்பட்டது. 


 






இந்த பாலம் இடிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இப்பாலம் இடிந்து விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை பலரும் வியப்புடம் பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜெர்மனியில் வடக்கு ரியன்-வெஸ்ட்ஃபாலியா பகுதி அதிகமாக மக்கள் வசித்து வரும் பகுதிகளில் ஒன்று. இங்கு தற்போது 15 புதிய சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் அந்தப் புதிய பாலமும் ஒன்று. பழைய பாலம் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் புதிய பாலம் கட்ட தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அமேசான் ஓனரின் பிரமாண்ட கப்பல்! வழிக்காக வரலாற்று பாலத்தை இடிக்க அரசு முடிவு !