மனிதர்களுடன் எளிதில் பழகிடாத க்யூட் விலங்குகளில் ஒன்றான அணில்கள் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் சமீபகாலமாக தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சிட்டுக் குருவிகளைப் போலவே மரங்களில் பொதுவாக உலாவியும், தயங்கித் தயங்கி மனிதர்களுடன் பழகக் கூடியவையுமான அணில்கள் எப்ப்போதுமே மனிதர்களை வசீகரிக்கக்கூடியவையாக உள்ளன.
அந்த வகையில் முன்னதாக கடலைக் காய் சாப்பிட கடுமையாகப் போராடி, வாயில் கடலையை அடக்கிக் கொண்டு ஓடும் அணில் ஒன்றின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது.
கடுமையாகப் போராடி இறுதியாக கடலை ஓட்டைக் கடித்து தன் வாயில் கடலையை அடக்கிக் கொண்டு இன்னொரு கடலையையும் அணில் தூக்கிக் கொண்டு ஓடும் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.
மேலும், 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 30 ஆயிரம் லைக்குகளையும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்று ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மேலும் படிக்க: Afghanistan quake: ''எல்லாரும் எங்க போய்ட்டீங்க?'' - நிலநடுக்கத்தில் பலியான ஓனரின் குடும்பத்தை தேடி அலையும் நாய்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்