சூழலியலாளர்களின் கூற்றுப்படி, கடந்த நூற்றாண்டில் ஆப்பிரிக்க பென்குயின்கள் மக்கள்தொகையில் மிக வேகமாக குறைந்துவிட்டது எனக் கணக்கிட்டுள்ளனர். மேலும் இவை அடுத்த சில தசாப்தங்களில் அழிந்து போகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பென்குயின் இனத்தின் உடைய இயற்கை வாழ்விடம் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு கடற்கரைப் பகுதி ஆகும். இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளுக்கான ரெட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. தன்னார்வலர்களின் முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும், தொழில்முறையாக மீன்பிடித்தல் முதல் எரிபொருள் கசிவுகள் வரை பல மனித காரணிகள் ஆப்பிரிக்க பென்குயின் இனத்தை தொடர்ந்து அழித்து வருகின்றன. ஒரு நூற்றாண்டில் மட்டும் ஆப்பிரிக்க பெங்குயின்களின் எண்ணிக்கை 98 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் கட்டா லுடினியா கூறியுள்ளார். 






20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2 சதவிகித ஆப்பிரிக்க பென்குயின்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. கட்டா கூறுகையில், "இந்தப் பகுதியில் மில்லியன் கணக்கான பெங்குயின்கள் இருந்தன. ஆனால் 2021ம் ஆண்டு தரவுகள்படி தென்னாப்பிரிக்காவில் 10 ஆயிரம் இனப்பெருக்க ஜோடிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று காட்டுகிறது." என்றார். 


20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள ஒரு தீவில் 20,000 பென்குயின் ஜோடிகள் வாழ்ந்தாலும், இன்று நாடு முழுவதும் 10,000 ஜோடிகள் மட்டுமே தென்படுகின்றனர் என்று டாக்டர் லுடினியா சுட்டிக்காட்டினார், 
"இந்த சரிவு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் நிலையில் உள்ளது, நம்மிடம் உள்ள பென்குயின்கள் மறைந்து வருகின்றன. சில தசாப்தங்களில் இவை முற்றிலும் காணாமல் போகலாம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறது" என்றார். இன்று பென்குயின்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் மீன் பற்றாக்குறை என்று குறிப்பிட்ட லுடினியா, தென்பகுதியில் வளர்ந்த மீன்பிடித் தொழிலின் ஒரு பகுதியாக பென்குயின்களின் முக்கிய ஊட்டச்சத்துக்களான மத்தி மற்றும் நெத்திலி போன்றவற்றை அதிகளவில் மீன்பிடிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம், எரிபொருள் கசிவுகள், அதிக கடல் போக்குவரத்தால் நீருக்கடியில் ஏற்படும் ஒலி மாசுபாடு மற்றும் சில தொற்றுநோய்கள் ஆகியவை ஆப்பிரிக்க பென்குயின் இனத்தின் விரைவான அழிவுக்கு முக்கிய காரணிகள் என்றும் லுடினியா கூறியுள்ளார். 


பெங்குயின் மீட்பிற்கு அதிகளவு தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரொனிஸ் டேனியல்ஸ், இதற்காக உலகெங்கிலும் உள்ள அனைவரையும் தன்னார்வத் தொண்டு செய்ய அழைக்கிறோம் என்றார். டேனியல்ஸ் கூறுகையில், "ஆப்பிரிக்க பெங்குயின்களை காப்பாற்ற விரும்புவோர் எங்களது 6 வார சர்வதேச தன்னார்வத் திட்டத்தில் சேரலாம். மேலும், தகுதியுள்ளவர்கள் எங்கள் 3 மாத இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேரலாம்."  என்றார்