கேன்சரைப் போராடி வென்று விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பைலட் ஒருவர் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக மக்களிடையே பரவா நோய்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நோய் புற்றுநோய்.
2020ஆம் ஆண்டு கணக்கின்படி புற்றுநோயால் ஓராண்டில் சுமார் ஒரு கோடி பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழலிலும் மன உறுதியுடன் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுபவர்கள் பலருக்கும் முன்னோடியாக விளங்குகின்றனர்.
அந்த வகையில் மார்பக புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருந்து அதனை எதிர்த்துப் போராடி வென்று மீண்ட பெண் ஒருவருக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கேன்சரில் இருந்து முன்னதாக மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்த்ரே, மம்தா உள்ளிட்ட பல இந்திய பிரபலங்களும் மீண்டு வந்துள்ளனர்.
முன்னதாக கேன்சரை எதிர்த்துப் போராடி வென்று வந்த மனிஷா கொய்ராலா, புற்றுநோய் தனது வாழ்வை எப்படி மாற்றியது என்பது குறித்து பேட்டியளித்தார்.
நான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எல்லாவற்றையும் இழந்து நின்றேன். அதுதான் என்னுடைய வாழ்கையை கொண்டாடவைத்தது. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் எனக்கு ஆசீர்வாதமான நாள்தான். முன்னதாக, நான் பார்க்க மறந்த விஷயங்களை இப்போது பார்க்கிறேன். இப்போது நான் உயிரோடு இருப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பேசியிருந்தார்.
தனது சுயசரிதை நூலான ‘Healed' புத்தகத்திலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்த அவர், “ கேன்சர் எனது வாழ்கைக்கு தைரியத்தை அளித்திருக்கிறது. மோசமான வாழ்கை முறையால் மிக எளிதாக நான் நோய்வாய்பட்டேன். பல இருண்ட நாள்களை நான் கடந்து வந்திருக்கிறேன். கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்ததை நினைத்து பார்க்கும் போது , எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எனது சிந்தனை கூர்மையானது. என் மனம் தெளிவானது. முன்பு பதற்றமாக இருந்த நான் தற்போது அமைதியாக வாழ்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். மனிஷா கொய்ராலா நடிப்பில் இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படத்தில் நடித்திருந்தார்.