சமூக வலைதளங்களில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான நிகழ்வு ஒன்று உள்ளது. அது என்ன?
இந்த வீடியோவை பேக்கிங் கிங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. அதில் முதலில் ஒரு நபர் கையில் உணவுடன் வந்து ஒரு மேஜையில் அமர்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து அவர் அருகே ஒரு புறா அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. அதை பார்த்த உடன் அவர் தன்னிடம் இருக்கும் உணவை அதற்கு தரவேண்டும் என்று நினைக்கிறார். அந்த சமயத்தில் கேக்கிற்கு உணவை வைக்காதீர்கள் என்ற பலகை வருகிறது.
அதாவது இந்த படத்தில் வருவது உண்மையான புறா அல்ல. அது புறா வடிவத்தில் செய்யப்பட்டுள்ள கேக் என்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதன்பின்னர் அந்த வீடியோவில் அந்த புறா வடிவை கேக்கை அந்த நபர் வெட்டி சாப்பிடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவுடன், ’இந்த வீடியோவில் கேக் மட்டுமே துன்புறத்தப்பட்டுள்ளது. மற்ற விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற பதிவும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை தற்போது வரை 5 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் அந்த கேக் செய்த நபர்களை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இது பார்ப்பதற்கு உண்மையான புறா போல் உள்ளது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பெண்கள் சீரியலில் நடிக்க தடை: சீரியஸாக திடீர் சட்டத்தை இயற்றிய தலிபான்கள்!