பொதுவாக சமூக வலைதளங்களில் உணவு தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவைவிட அதை பரிமாறும் விதம் மிகவும் சிறப்பானதாக இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். அந்தவகையில் தற்போது ஒரு உணவு வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. 


அதாவது இந்த உணவு தொடர்பாக ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உணவை சமைப்பவர் உணவை நன்றாக சமைக்கிறார். அந்த உணவை லாவகமாக சாலையில் எதிர் புறத்திலுள்ள ஒருவருக்கு தூக்கி போடுகிறார். சாலையின் மறுபுறத்தில் உள்ள ஒருவர் அதை சிறப்பாக கேட்ச் பிடித்து பரிமாற செல்கிறார். இப்படி சாலையின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு அவர் திரும்பி பார்க்காமல் சரியாக அந்த நபரின் தட்டில் உணவை ஏரிவது பெரும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. 






இந்த வீடியோவை தற்போது வரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த சமையல்காரரின் திறமையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ''நான் இருக்கேன்.. காணாமல் போகல'' : வீடியோ காலில் வந்த வீராங்கனை! உடைந்த மர்மம்!