குஞ்சுகளுடன் கண்ணாம்பூச்சி விளையாடும் வாத்து- வைரல் வீடியோ !

தாய் வாத்து தன்னுடைய குஞ்சுகளுடன் தண்ணீரில் கண்ணாம்பூச்சி விளையாடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பொதுவாக அம்மா குழந்தை உறவு மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் மிகவும் அதிகமாக உண்டு. ஒரு தாய் தன்னுடைய குழந்தை குட்டி அல்லது குஞ்சுகளை மிகவும் அரவணைப்பாக பார்த்து கொள்வது வழக்கம். அந்தவகையில் ஒரு வாத்து தண்ணீரில் தன்னுடைய குஞ்சுகளுடன் செல்லமாக விளையாடியுள்ளது. 

Continues below advertisement

இது தொடர்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ளார். அதில் ஒரு வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வாத்து தன்னுடைய குஞ்சுகள் தனக்கு அருகே வரும் போது தண்ணீருக்குள் மூழ்கி வேறு இடத்திற்கு செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக அமைந்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவை பலரும் பார்த்து பகிர்ந்தும் வருகின்றனர். இதுவரை இந்தப்  பதிவை சுமார் 17.1 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 

 

இந்தப் பதிவிற்கு சில தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். அதில், “இது குஞ்சுகளுக்கு எப்படி தண்ணீரில் மூழ்கி தப்பிக்க வேண்டும் என்று தாய் வாத்து சொல்லி தரும் பாடம்” என்று சிலர் பதிவிட்டுள்ளனர். மற்றொருவர் மனிதர்களைவிட விலங்குகள் மிகவும் பாசத்தை கொண்டவை எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

இவ்வாறு பலரும் சில கருத்துகளை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க: பெண்கள் மட்டும் நுழையும் காடு - எங்கே உள்ளது தெரியுமா?

Continues below advertisement
Sponsored Links by Taboola