கின்னஸ் உலக சாதனை சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகள் தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றில் பல வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் செய்யும் சாதனை பலரையும் கவர்ந்துள்ளது. 


அதன்படி ரோமன் சஹ்ராதயன் என்ற அர்மேனியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் பறக்கும் ஹெலிகாப்டரின் பிடியில் தொங்கியபடி புல் அப் எடுத்துள்ளார். இவர் ஒரு நிமிடத்திற்குள் சுமார் 23 புல் அப்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 






 


இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை பக்கம் தன்னுடைய சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டது. இந்த வீடியோவை சுமார் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சாதனையை படைத்த ரோமன் மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் தன்னுடைய சாதனையை நாட்டில் போரின் போது உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்பணித்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:'திகிலூட்டுகிறது'.. உக்ரைன் போரால் பதறிப்போன ப்ரியங்கா சோப்ரா!! இன்ஸ்டாவில் சோக பதிவு!