பொதுவாக விலங்குகள் தொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அதுவும் அந்த விலங்குகள் செய்யும் சேட்டைகள் தொடர்பான வீடியோக்கள் என்றால் அதை பலரும் விரும்பி பார்ப்பார்கள். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அந்த விலங்கு சேட்டை எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. அதற்கு காரணம் என்ன?


அமெரிக்காவின் டெக்ஸ்டர் பகுதியில் ஒருவரின் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்துள்ளார். 6 வயதான அந்த நாய் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த நாய்க்கு 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தன்னுடைய ஒரு காலை நாய் இழந்து நடக்க தடுமாறியுள்ளது. எனினும் தன்னுடைய விடா முயற்சியால் 3 கால்களை வைத்து மனிதர்களை போல் நடக்க கற்று கொண்டுள்ளது. 


 






அதன்பின்பு அது வீட்டிற்குள் இருக்கும் அறைகளுக்கு தன்னுடைய மூன்று கால்களுடன் மெதுவாக நடக்க தொடங்கியுள்ளது. இந்த நாய் நடப்பது தொடர்பான வீடியோவை அதன் உரிமையாளர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த நாயின் தன்னம்பிக்கை குறித்து பாராட்டும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: முறிந்துபோன நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்: மேக்ரோன், மோரீஸன் தகவல் பரிமாற்றம் கசிந்தது!