நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டில் உள்ள கலாச்சாரம் , உணவு , பழக்க வழக்கம் உள்ளிட்டவற்றை ரசிக்க தவறுவதில்லை. அதே நேரம் நமது பாரம்பரியம் , நடைமுறைகள் உள்ளிட்டவற்றை மதிக்கவும் செய்வோம். அந்த வகையில் மேலை நாடு ஒன்றில் பெண்கள் நீச்சல் உடைகளில் கடற்கரையில் குவிந்து  இருக்க , அவர்களுக்கு மத்தியில் வட இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையில் பெண் ஒருவர் வலம் வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






நெட்டிசன்கள் கருத்து :



கடற்கரையில் பிகினி அணிந்த பல சுற்றுலாப் பயணிகளிடையே சேலையில் அந்தப் பெண் மட்டும் தனித்து நிற்கிறார்.  ஊதா , சிகப்பு , பச்சை என்னும் முதன்மை நிறங்கள் கொண்ட பாந்தினி ஆடையை அப்பெண் அணிந்திருக்கிறார். அந்த வகை ஆடை வட இந்தியாவின் பாரம்பரியங்களில் ஒன்று. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அந்த பெண் நடந்து வருவதை அக்கிருக்கும்  வெளிநாட்டு பெண்கள் வியந்தும் பார்க்கின்றன. இந்த வீடியோவை Rishika gurjar என்னும் ட்விட்டர் பயனாளர் பகிர்ந்திருக்கிறார். இது 99 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் அந்த பெண்ணை பாராட்டியிருக்கின்றனர். ஆனாலும் சிலர் இதுதான் கலாச்சாரத்தை பரப்பும் செயலா ? என அந்த பெண்ணின் செயலை சாடி கேள்வி எழுப்பியுள்ளனர்.


மற்றுமொரு வைரல் வீடியோ :


கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி Dj என்னும் ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஸொமாட்டோ டெல்வரி ஊழியரிடம் ஏதோ கடுமையாக பேசுகிறார். சில வினாடிகளில் காலில் போட்டிருந்த ஷூவை எடுத்து அந்த டெலிவரி ஊழியரை இரண்டு முறை அடித்துவிட்டு மீண்டும் காலில் ஷூவை போட்டுக்கொண்டு , தன்னுடன் வந்த தோழியுடன் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். சம்பந்தப்பட்ட ஊழியர் எதுவும் பேசாதவராய் , பயந்தவராக கைகளை கட்டிக்கொண்டு நின்றுக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என தெளியவாக தெரியவில்லை. என்றாலும் கூட பெங்களூருவாக இருக்கலாம் என்கின்றனர் சிலர்.





ஸொமாட்டோ டெலிவரி பாய் வேறு ஒருவருடைய உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்துவிட்டார். அதற்கான பில் வேறு என்பதால், அதனை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதனால் அந்த பெண் காலணிகளை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு டெலிவரி ஊழியர், பதிவிட்டவரின் அறைக்கு சென்று கதறி அழுததாகவும், தன் வேலை போய்விடும் என பயந்ததாகவும் Dj  தெரிவித்திருக்கிறார்.