அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சுடுதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் இருக்கும் வாஷிங்டன் பூங்காவின் அருகே ஒரு துப்பாக்கி சுடுதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுடுதல் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த இடத்தில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பூங்கா ஒன்றில் இரவு நேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த 4 பேரை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் மூன்று பேர் சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிகிறது. ஒருவர் சற்று நலமாக உள்ளதாக கருதப்படுகிறது. இதன்காரணமாக இந்த துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் உயிரிழிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
3 இடங்களில் கத்திக்குத்து நடத்திய இரண்டு பேர்.. 10 பேர் பலி 15 பேர் காயம்:
கனடா நாட்டிலுள்ள சாஸ்கட்சவான் மாகாணத்தில் கடந்த 4ஆம் தேதி சில இடங்களில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது. அதன்படி சாஸ்கட்சவான் மாகாணத்திலுள்ள வெல்டன் கிராமம், வடகிழக்கு சாஸ்கட்சவான் மற்றும் ஜேம்ஸ் க்ரீ நேஷன் ஆகிய 3 இடங்களில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது.
இந்தச் சம்பவங்களில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மூன்று இடங்களிலும் ஒரே நபர்கள் தான் குற்ற சம்பவத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குற்ற செயலை செய்தவர்கள் தொடர்பாக காவல்துறை படங்களை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி டெமியன் சண்டர்சென் மற்றும் மையில்ஸ் சண்டர்சென் ஆகிய இருவரும் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பின்பு ஒரு கருப்பு நிற நிஷான் காரில் தப்பி சென்றுள்ளது கண்டறியப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை இருவரை பிடிக்க காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரே மாகாணத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.