கலிபோர்னியா நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த டிரக் லாரியில் இருந்து கட்டு கட்டாக பணத்தாள்கள் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டது. சாலையின் நெடுகிலும் பணத்தாள்களைக் கண்ட மக்கள் ஆர்பரித்தனர். செய்வதறியாது திகைத்த அவர்கள், தங்கள் கார்களில் இருந்து இறங்கி பணத்தை அள்ளியக் காட்சி சமூக ஊடங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள San Diego எனும் நகரில் இருந்து Federal Deposit Insurance Corporation எனும் காப்பீட்டு  முகமைக்கு கொண்டு சென்ற பொது இந்த சம்பவம் நடைபெற்றது.  எதிர்பாரதவிதமாக டிரக்கின் பின்பகுதி கதவு திறந்ததால், பணக் கட்டுகள் அப்படியே காற்றில் பறந்து, சாலையில் சிதறின.  


இதற்கிடையே, பணத்தை அள்ளிச்சென்ற மக்கள் முறையாக மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை காவல்துறை எச்சரித்துள்ளது.        


 #USA #California #SanDiego #Interstate 5. Armored truck scatters cash on freeway: Traffic along a freeway was paralyzed when people stopped. The authorities have asked the public to return the money or risk criminal charges… come on! pic.twitter.com/9PaPqKsv11


— Donato Yaakov Secchi (@doyaksec) November 20, 2021









            



அடுத்த 48 மணி நேரத்திற்குள் பணத்தை திரும்பி ஒப்படைக்காவிட்டால், சமூக ஊடகங்களில் சுற்றிவரும் வீடியோ ஆதராங்களைக் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண