அமெரிக்காவில் 18 வயது பெண் ஒருவர் தனது  3 வயது குழந்தையை கொலை செய்வதற்காக ஒருவரை வேலைக்கு நியமிக்க முயன்ற  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக நியூயார்க் போஸ்டில் செய்தி வெளியாகி உள்ளது. 


அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையை கொல்ல  RentAHitman.com என்ற இணையதளத்தை நாடி உள்ளார். அந்த இணையதளம் போலி என்பதை அறியாத பெண் தனது குழந்தையின் புகைப்படம், இடம் ஆகிய விவரங்களை அந்த தளத்தில் சமர்ப்பித்தார். இதனையடுத்து அந்த இணையதள ஆபரேட்டர்கள் குழந்தையை கொலை செய்ய ஒரு இளம் பெண் தங்கள் தளத்தை அணுகியதாக போலீசில் புகார் அளித்தனர். இணையத்தில் அந்த பெண் தனது விவரங்களை சமர்பித்த கணினியின் ஐபி முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். 


தன்னை ஒரு கொலையாளி என அடையாளப்படுத்திக் கொண்ட அந்த புலனாய்வாளர் அந்த பெண்னை தொடர்பு கொண்டு அவரின் குழந்தையை கொலை செய்ய 3000 டாலர் தரவேண்டும் என கூறிய நிலையில் அப்பெண் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தகவல் தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தையதாக  குற்றம்சாட்டப்பட்டது.  மேலும் குழந்தையிடம் இருந்து அப்பெண் விலகி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தை உறவினர்களுடன் பாதுகாப்பாக இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 


அந்த பெண் தன் குழந்தையை கொலை செய்ய முயன்றதற்கான காரணம் தெரியவில்லை என கூறப்படுகிறது. 


'ரென்ட்-எ-ஹிட்மேன்' என்பது ஒரு போலி தளமாகும். இதில் போலி சான்றுகள், கோரிக்கைப் படிவம் மற்றும் வேலை விண்ணப்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒரு கொலையாளியை வேலைக்கு அமர்த்த விரும்புவோரைப் பிடிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த வலைத்தள நிறுவனர் ஆன்லைன் தளத்தை உருவாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். வலைத்தளத்தின் உரிமையாளர்  கடந்த ஆண்டு மக்களின்  சந்தேகத்திற்குரிய கோரிக்கைகளை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது. 


'' இணையம் நிச்சயம் பாதுகாப்பான இடம் அல்ல. அங்கே கெட்டவர்கள் இருக்கிறார்கள்,'' என்று RentAHitman.com இன் உரிமையாளர் பாப் இன்னெஸ்  மக்களிடம் கூறினார் .


மேலும் படிக்க, 


Brij Bhushan: பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்குக்கு ஜாமீன்..அதிர்ச்சி தந்த நீதிமன்றம்


Manipur Issue: அடப்பாவிங்களா..! பாலியல் வன்கொடுமைக்கு காரணமே காவல்துறையா? - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் கதறல்