அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் சூறாவளி குறித்தான எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆகையால், அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தென்கிழக்கு நெப்ராஸ்காவில் ஒரு சூறாவளி தாக்கியது. மாலை 3 மணிக்குப் பிறகு வடகிழக்கு நோக்கி வேகமாக நகர்ந்ததாக வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சாலையை கடக்கும் சூறாவளி:
கடந்த வெள்ளிக்கிழமை லிங்கன் நகருக்கு வடக்கே ஒரு பெரிய சூறாவளியானது, சாலையை கடக்கும் காட்சியானது, வானிலை வீடியோகிராஃபர் நிக் கோர்மனால் எடுக்கப்பட்டு X இல் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் மிகப்பெரிய சுழல் காற்றானது சாலையை கடக்கிறது. அப்போது, சாலையில் வரும் கார்கள் முன்னெச்சரிக்கையாக வேகத்தை குறைத்து இருப்பதை பார்க்க முடிகிறது. மிகப் பெரிய கூட்டத்திலிருந்து உருவாகியுள்ள சுழல் காற்றானது , தரையை தொட்டவாறு நகர்ந்து செல்வதை காண முடிகிறது,
டொர்னாடோ:
இந்த சக்தி வாய்ந்த சுழல் காற்றானது, ஆங்கிலத்தில் டொர்னாடோ என அழைக்கப்படுகிறது. இது ஒரு புயல் வகையைச் சேர்ந்ததுதான். குறிப்பாக புயல் கடல் பகுதியில் உருவாகும். ஆனால் நிலத்தில் உருவாவதை சுழல் காற்று என அழைக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில், இதை டொர்னாடோ என அழைப்பர்.
இந்த சுழல் காற்றானது, மிக சக்தி வாய்ந்ததாகும், இந்த சுழல் பகுதியானது, போகும் இடங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது. வான் மேகத்தையும் , தரைப் பகுதியை தொட்டவாறு அதிவேக காற்றானது சுழலும். இந்த சுழல் காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை செல்லும்போது, வழியில் இருப்பதை எல்லாம் சிதறடித்து விடும். இங்கு இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியில் கூட மிகப் பெரிய லாரி ட்ரக்கை கவிழ்த்திருப்பதை பார்க்கலாம். இந்நிலையில் , இந்த வீடியோவானது, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது.
Also Read: Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!