அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாஷிங்டன்: வட கரோலினாவின் தலைநகர் ராலேயில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.  இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது.  கடந்த ஓராண்டில் மட்டும் 49,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


வடக்கு கரோலினாவின் உள்ள ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில்  மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய பின் அந்த மர்ம நபர் தப்பியோடினார். இதனால் அங்கு இருந்த சிலர் பதறி அடித்து ஓடினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அந்த நபரை ராலே நகரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் இதுபோன்று கடந்த சில நாட்களுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கார்னிங் என்ற நகரின் அருகே அங்கு இருக்கும் ஒரு வீட்டின் மாடியில் ஏறி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனை அடுத்து பள்ளியில் புகுந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சில மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. காயங்கள் ஏற்பட்ட மாணவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அதன்பிறகு அதை பகுதியில் சாலை ஓரம் அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை அதே இடத்திலேயே சுட்டுக் கொன்றனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.


இதுபோன்று மேலும் ஒரு இடத்தில் நடந்தது. அதில் அமெரிக்காவின் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மற்றொரு நபர் அது பற்றி அறிந்தவுடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை நோக்கி சுட்டார். இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 4-ஆக உயர்ந்துள்ளது. இதனை கிரீன்வுட் காவல் துறையின் தலைவர் ஜிம் ஜசன் உறுதிப்படுத்தி உள்ளார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 49,000 பேர் உயிரிழந்ததாக தகவல்  வெளியாகி உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறுவது குறிப்பிடத்தக்கது.