அமெரிக்காவில் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள  அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட இருப்பதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன் வீடியோ ஒன்றையும் அவர் பகிந்துள்ளார். 




”ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்க வேண்டிய  தருணம் ஒவ்வொரு தலைமுறைக்கும் உண்டு. அவர்களின் அடிப்படை சுதந்திரத்திற்காக எழுந்து நிற்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கானது என்பதை நம்புகிறேன். ஆகவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளேன்.” என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டு அமெரிக்காவில் பிரதான கட்சிகள். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. அடுத்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.


இரண்டு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.




மேலும் வாசிக்க.


Crime: 24 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் உள்ளே தள்ளிய போலீஸ்


Ponniyin Selvan: "இப்படியெல்லாம் பண்ணிட்டு ஷூட்டிங் வராதீங்க.." கார்த்தியிடம் கறாராக பேசிய மணிரத்னம்..!