குரங்கு அம்மை நோயால் ஆப்பிரிக்காவில் இதுவரை மொத்தம் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.


70 நாடுகளுக்கு பரவல்


உலகம் முழுவதும் மொத்தம் 70 நாடுகளுக்கு குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளில் இந்நோயைக் கட்டுப்படுத்தி உயிர்களைக் காக்க தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் குரங்கு அம்மை


இது குறித்து முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுக சுகாதார அலுவலர்கள், சுகாதாரத்துறை பிராந்திய இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனையை தீவிரப்படுத்துவதால் நாட்டில் குரங்கு அம்மை அபாயம் குறையும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.





முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்தது. 


சர்வதேச பரவல்



முன்னதாக குரங்கு அம்மை கொரோனா போன்று உலக அளவில் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும், குரங்கு அம்மை நோய் என்பது சர்வதேசப் பரவல் என்பதை நம்ப வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரி இருந்தது.



மேலும், மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கு அம்மை வேகமாகப் பரவும் நோயல்ல என்றும், மெதுவாக இது சமூகப் பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டு குரங்கு அம்மையைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார மையம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண