Viral Video: அமெரிக்காவில் உள்ள K9 யூனிட்டைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு, கடுமையான வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, மாஸான கூலிங் கிளாஸ் மற்றும் கிளாஸான ஷூவுடன் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இணையம் வளர்ந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடக்கும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் அனைத்தும் கண்ணிமைக்கும் உலகம் முழுவதும் வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. இதன் வரிசையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு போலீஸ் மோப்ப நாய் கூலிங் கிளாஸ் மற்றும் ஷூ அணிந்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. 



 


அமெரிக்காவின், காலிஃபோர்னியா  மாகாணத்தினைச் சேர்ந்த K9 யூனிட் காவல் நிலையத்தினைச் சேர்ந்த மோப்ப நாய் தோர். ஹாலிவுட் படத்தின் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தின் பெயரினை இந்த நாய் கொண்டுள்ளதால், காலிஃபோர்னியா மாகாணத்தில் இந்த நாய் மிகவும் பிரபலமான மோப்ப நாயக உள்ளது. அமெரிக்காவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வழக்கமான கோடை கால மாதங்களாக உள்ளன. தற்போது அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்துக் கொண்டுள்ளது. மிகவும் மூர்க்கமாக கொளுத்தும் வெயிலால் மக்கள் தங்களின் அன்றாட  வாழ்க்கையினை வாழவே பெரும் சவாலாக இருக்கிறது. இப்படியான சூழலில், அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரு ஜாலியான வீடியோ வைரலாகி வருகிறது. 


அது காலிஃபோர்னியா மாகாணத்தின், K9 யூனிட்டைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு, கடுமையான வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, மாஸான கூலிங் கிளாஸ் மற்றும் கிளாஸான ஷூ ஒரு காவல் அதிகாரியால் அணிவிக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வீடியோவில், காவல் அதிகாரி மோப்ப நாய் தோர்க்கு ஷூ அணிவிப்பதும், தோர் சூரியக் குளியலில் ஈடுபடுவதைப் போல கூலாக கூலிங் கிளாஸ் அணிந்து, சூரியனை, ‘ என்ன தம்பி சௌக்கியமா’ என கேட்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படம் பார்ப்பவர்களை ரசனைக்கு ஆட்படுத்துவதுடன், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண