அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளில் இருந்து தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதிபரின் சைக்கிள் பயணம்

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை வீட்டுக்கு அருகில் ஜோ பைடன் முன்னதாக சைக்கிளில் பயணித்துள்ளார். அப்போது சைக்கிள் ஓட்டி முடித்து அதனை நிறுத்த முயற்சிக்கையில் நிலைதடுமாறி பைடன் கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தை அங்கு கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும் அதிபர் ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.

வெள்ளை மாளிகை விளக்கம்

முன்னதாக இச்சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அதிபருக்கு இச்சம்பவம் குறித்து மருத்துவ கவனம் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், அதிபர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தங்களது 45ஆவது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக அமெரிக்க அதிபர்ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் பீச் இல்லத்தில் தங்களது நீண்ட விடுமுறையைக் கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Black Hole : `ஒரு நொடியில் ஒரு பூமியை இழுக்கும் வேகம்!’ - அதிவேகமாக வளரும் மிகப்பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண