அந்தரங்க உறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேபிள் வயர்.. ஷாக் ஆன மருத்துவர்கள்.. இளைஞரின் நிலை என்ன?

சமீபகாலமாக உடல் உறுப்புகளில் ஏதேனும் பொருட்கள் சிக்கிக் கொள்வதும், அதனை மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு அகற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.

Continues below advertisement

பாகிஸ்தானில் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் இருந்து கேபிள் வயர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சமீபகாலமாக உடல் உறுப்புகளில் ஏதேனும் பொருட்கள் சிக்கிக் கொள்வதும், அதனை மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு அகற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் மருத்துவ சிகிச்சைகளின் போது ஊசி, அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் போன்றவை உடலுக்குள் தவறுதலாக சென்று விடும் சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. 

அதேசமயம் அந்தரங்க உறுப்புகளில் ஏதேனும் பொருட்களை நுழைத்து ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தாலும் இதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பாகிஸ்தானில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கராச்சி நகரில் வாழும் நபர் ஒருவருக்கு நீண்ட காலமாக சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவரை எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் அந்தரங்க உறுப்பில் ஏதோ ஒரு மர்ம பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்சனையை சரி செய்ய 18 சென்டிமீட்டர் நீளமுள்ள வயரை நுழைத்துள்ளார். ஆனால் அது உள்ளே சிக்கிக்கொண்டதால் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் தான் மருத்துவமனைக்கு அந்த நபர் சென்றுள்ளார்.  

அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் வயர் அகற்றப்பட்டது. அந்த நபர் சிகிச்சைக்கு வராமல் இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உலகளவில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் இதற்கு முன்பாகவே  நடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பிரேசிலில் ஒரு நபரின் அந்தரங்கப் பகுதியில் இருந்து பாலியல் ஆசைக்காக நுழைக்கப்பட்ட சுமார் 2 கிலோ எடையுள்ள உடற்பயிற்சி செய்யும் டம்பெல்ஸ் மிகவும் சிரமப்பட்டு மருத்துவர்கள் குழுவால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Odia television actress death: அடுத்தடுத்து தொடரும் மர்மம்! பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்பு! வீட்டுக்குள் சிக்கிய கடிதம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement