இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் 195 மில்லியன் யூரோ பரிசு விழுந்துள்ளது. ஐரோப்பிய லாட்டரி வரலாற்றில் இவ்வளவு பரிசு கிடைப்பது இதுவே முதல்முறை.


195 மில்லியன் யூரோ பரிசு:


தி யூரோ மில்லியன்ஸ் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு முறை நடைபெறுகிறது.  இந்த போட்டியானது 9 ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுக்கலில் 6,23,27,40,41 ஆகியவற்றுடன் 2 மற்றும் 12 ஆகிய எண்களும் லக்கி ஸ்டார் எண்களாக அறிவிக்கப்பட்டன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு 195 மில்லியன் யூரோக்கள் பரிசாக விழுந்துள்ளது. இந்த குலுக்கலில் இதற்கு முன்பு இவ்வளவு விழுந்ததில்லை. 195 மில்லியன் யூரோக்கள் பரிசு விழுவது இதுவே முதல்முறை என்று கேமலாட் ஆண்டி கார்டர் கூறியுள்ளார்.


1,593 கோடி ரூபாய் பரிசு:


இந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் தங்களது எண்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டனர். அந்த எண்கள் அவர்களுக்கு வந்திருந்தால் உடனடியாக அழைக்குமாறு கூறியுள்ளனர். அதில் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த ஜாக்பாட் விழுந்துள்ளது. அவருக்கு விழுந்த மொத்த தொகை 19 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரம் யூரோக்கள். அதாவது இந்திய மதிப்பில் 1593 கோடியே 55 லட்சத்து 80 ஆயிரத்து 137  ரூபாய்கள். 




சர் டாம் ஜோன்ஸை விட பணக்காரர்:


இந்த ஜாக்பாட்டை வென்றதன் மூலம் 180 மில்லியன் யூரோ சொத்துகளை வைத்துள்ள சர் டாம் ஜோன்ஸை விட பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார் அந்தநபர்.  க்ளூசெஸ்டரைச் சேர்ந்த ஜோ அண்ட் ஜெஸ் த்வைட் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் 184 மில்லியன் யூரோக்களை இதே லாட்டரியில் வெற்றிபெற்றிருந்தனர். 




வரலாற்றில் 15 பேர் மட்டும்:


இதுவரை யுகே வரலாற்றில் 15 பேர் மட்டுமே 100 மில்லியன் யூரோக்களை பரிசாகப் பெற்றுள்ளனர். அதில் 195 மில்லியன் யூரோக்களை பரிசாக வென்றிருக்கிறார் அந்த பெயர் தெரியாத நபர்.


ஆகஸ்ட் 2012ல் கேம்ப்ரிட்ஜை சேர்ந்த அட்ரியன் கிலியன் பேஃபோர்ட் 148.656 மில்லியன் யூரோக்களையும், ஜூலை 2011ல் அய்ர்ஷைரைச் சேர்ந்த காலின் மற்றும் க்றிஸ் வெய்ர் ஆகியோர் 161.653 மில்லியன் யூரோக்களையும், அக்டோபர் 2019ல் பெயர்தெரியாத நபர் 170.221 மில்லியன் யூரோக்களையும், மே 2022ல் க்ளூசெஸ்டரைச் சேர்ந்த ஜோ மற்றும் ஜெஸ் த்வைடி ஆகியோர் 184. 262 மில்லியன் யூரோக்களையும் பரிசாக பெற்றிருந்தனர். இந்த நிலையில் 195.707 மில்லியன் யூரோக்களை பரிசாக வென்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார அந்த பெயர் தெரியாத நபர். 


யார் அந்த பணக்கார பெயர் தெரியாத மில்லியனர் என்பதே ஐரோப்பிய நாட்டில் இப்போது மில்லியன் யூரோ கேள்வியாக இருக்கிறது.