அமெரிக்காவில் உள்ள ஓரியான் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மணல் டாலர்கள் மர்மமான முறையில் கரை ஒதுங்கியதை கடலியல் வல்லுநர்கள் விநோத நிகழ்வாக பார்க்கின்றனர்.


மணல் டாலர்கள் என்றால், மணலில் செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தட்டையான கடல் முள் இனத்தை சேர்ந்த இந்த உயிரினம், அவற்றின் வடிவம் மற்றும் அளவு காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.


முதுகெலும்பில்லாத வகை உயிரினமான மணல் டாலர்கள், மிகச்சிறிய தோற்றம் கொண்டவை. அதன் அளவு சராசரியாக மூன்று முதல் நான்கு அங்குலங்கள் வரை மட்டுமே இருக்கும். இதற்கு டெஸ்ட் என்று அழைக்கப்படும் ஒரு உறுதியான எலும்புக்கூடு உள்ளது. அவற்றின் உடலில் தனித்துவமான இலைகளை போன்ற வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.




மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல நீர்நிலைகளில் வாழும் இந்த மணல் டாலர்கள், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும் காணப்படுகின்றன. அமெரிக்காவின் தென்கிழக்கு மற்றும் கடலோர கடற்கரை பகுதியான ஓரிகானில் அதிக எண்ணிக்கையில் கரை ஒதுங்கிய மணல் டாலர்களின் தோற்றம் கடலியல் நிபுணர்களையே திகைக்க வைத்தது. வழக்கத்திற்கு மாறாக அதிக அலைகள் எழும்பியதன் காரணமாக மணல் டாலர்கள் கரைக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


மணல் டாலர்களால் கடலுக்கு வெளியே சில நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது. தண்ணீர் இல்லாமல், அவை விரைவாக காய்ந்துவிடும். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பழமையான நீர்வாழ் காட்சிசாலைகளில் ஒன்றான சீசைடு சாலை, கரை ஒதுங்கிய மணல் அட்டைகளின் உயிரினங்களின் புகைப்படங்களை தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மணல் அட்டைகள் பிற்பகல் கடலில் எழுந்த அதிக அலைகளின் போது கரை ஒதுங்கி இருக்கும் என தெரிவித்துள்ள நீர்வழிக் காட்சி சாலை, அவை உயிருடன் இருந்தாலும், மீண்டும் கடலில் விட வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளது.


"இதற்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒரு இடத்தில் மட்டும் நடந்துள்ளதா அல்லது இது மற்ற கடற்கரைகளிலும் நடக்கிறதா என்பதும் எங்களுக்குத் தெரியாது. எத்தனை மணல் டாலர்கள் கரை ஒதுங்கின என்று சொல்வது கடினம். கரை ஒதுங்கிய மணல் டாலர்கள் தெளிவற்ற நிலையில், காணப்படுகின்றன. அவற்றை கடற்கரையிலேயே  விட்டுச்செல்வது சிறந்தது, அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் கடும் துர்நாற்றம் வீசும்" என்று அவர்கள் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளனர். இருப்பினும் உலகளாவிய அளவில் டாலர் கரை ஒதுங்கியிருக்கு என்கிற செய்தியை வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர்.